மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
30-Nov-2024
போடி: போடி அருகே அமராவதி நகர் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பசும்பொன் 46. இவரது மனைவி கவிதா 40. 2 மகன்கள் உள்ளனர்.இருவருக்கும் இடையே 2 நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த கவிதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது.பசும்பொன் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை தேடி வருகின்றனர்.
30-Nov-2024