உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

புலிகள் காப்பக பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்

மூணாறு : மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் ஆனமலை புலிகள் காப்பகம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.கேரளாவை, தமிழகம் உள்பட பிற மாநிலங்களுடன் இணைக்கும் ரோடுகளில் மூணாறு, உடுமலைபேட்டை மாநில நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானதாகும்.இந்த ரோட்டில் கேரள, தமிழக எல்லையான சின்னார் பகுதியில் ஆனமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி துவங்குகிறது. அதில் காட்டு மாடு, யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் ஏராளம் உள்ளன. காட்டு யானைகள் பகல், இரவு என எந்நேரமும் ரோட்டில் நடமாடுவதை காணலாம். குறிப்பாக சின்னார் அருகே ' எஸ்' வளைவு, பொங்கன்ஓடை ஆகிய பகுதிகளில் ரோடுகளில் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.தற்போது கோடை துவங்கியதால் தீவனம், குடிநீர் ஆகியவற்றை தேடி ரோடுகளில் கூடுதலாக நடமாடுகின்றன. கோடை சுற்றுலா சீசன் துவங்கியதால் மறையூர், காந்தலூர், மூணாறு ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. அவர்கள் யானைகளை கடந்து செல்ல வெகு நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. தமிழக வனத்துறையினர் யானைகளை கண்காணித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jai
ஏப் 13, 2025 14:26

காட்டு விலங்குகள் நடமாடும் பகுதிகளில் நீங்கள் எதற்காக செல்கிறீர்கள்? ஒழுக்கம் அற்ற மனிதக் கூட்டமே.... நீ இங்கேயே கிட


சமீபத்திய செய்தி