வனவிலங்கு வேட்டை: இருவர் கைது
மூணாறு : வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி தலைமையில் வனக்காவலர்கள் அக்.6ல் அதிகாலை மூணாறு அருகே குட்டியாறுவாலி பகுதியில் ரோந்து சென்றபோது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதனால் சுதாரித்த வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியபோது வனத்துறையினரை பார்த்து ஒரு கும்பல் தப்பி ஓடியது. அடிமாலி அருகே தோக்குபாறை ஆறாம் மைலைச் சேர்ந்த அஜிஸ் 24, அனந்து 27, ஆகியோர் வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்து விசாரித்தபோது குட்டியாறுவாலி பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மிளா மானை வேட்டைாடியதாக தெரியவந்தது.இறந்த மிளா மானின் உடலை நேற்று வனத்துறையினர் கைப்பற்றினர். அதேபோல் கைதானவர்களிடம் இருந்து ஆட்டோ, டூவீலர், கத்தி உள்பட ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து துப்பாக்கியுடன் தலைமறைவான நான்கு பேரை தேடி வருகின்றனர். அனைவரும் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.