உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீடு விற்பதாக ரூ.63.66 லட்சம் மோசடி: பெண் கைது

வீடு விற்பதாக ரூ.63.66 லட்சம் மோசடி: பெண் கைது

தேனி:தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் வீட்டை விற்பதாக கூறி ரூ.63.66 லட்சம் கிரையம் பேசி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கோகிலாவை 39, போலீசார் கைது செய்தனர்.தேனி அரண்மனைப்புதுார் பசுமை நகர் சுகந்தி. இவரது தந்தை பாஸ்கரன் மூலம் லட்சுமிபுரம் விஜயகுமார் அறிமுகமானார். இவரது வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக விஜயகுமார், கோகிலா இணைந்து சுகந்தியிடம் கூறினர்.சுகந்தி பணத்தை வழங்கி கிரையம் செய்தார். அதே நேரத்தில் வீட்டை மகள் காவியாவிற்கு தானசெட்டில்மெண்டாக விஜயகுமார், கோகிலா எழுதி கொடுத்தனர். மூவர் மீதும் எஸ்.பி., சிவபிரசாத்திடம் சுகந்தி புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் விஜயகுமாரை கடந்த மாதம் கைது செய்தனர். கோகிலாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ