விஷம் குடித்து பெண் பலி
போடி: போடி அருகே நாகலாபுரம் வடக்குப் பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி வனராணி 45. இரண்டு குழந்தைகள் உள்ளனர். வனராணிக்கு 5 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. உரிய சிகிச்சை பெற்றும், முடியாத நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி வனராணி நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.