மேலும் செய்திகள்
விபத்தை தடுக்க வேகத்தடைமீது வண்ணம் பூச வேண்டும்
11-Apr-2025
பெரியகுளம் : பழனிசெட்டிபட்டி ஜவஹர்நகர் வினோத்குமார் 37. இவரது மனைவி பாண்டிச்செல்வி 34. டூவீலரில் பெரியகுளம் சென்று விட்டு அங்கிருந்து தேனி நோக்கி சென்றனர். லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கிய போது பாண்டிச்செல்வி கீழே விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு பின் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.பெரியகுளம் தேனி ரோட்டில் 15 கி.மீ. துாரத்தில் 14 வேகத்தடைகள் உள்ளது. இரவில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் டூவீலரில் செல்லும்போது, வேகத்தடையால் பலரும் விழுந்து காயப்படுகின்றனர். கடந்தாண்டு டி.கள்ளிப்பட்டி அருகே டூவீலரில்செல்லும்போது வேகத்தடையில் பெண் விழுந்து இறந்தார். வேகத்தடையில் இரு புறமும் ரிப்ளக்டர் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும் வேகத்தடைகளின் எண்ணிக்கையை குறைத்து உயரத்தையும் குறைக்க வேண்டும்.
11-Apr-2025