உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி ஐ.டி.ஐ., எதிரே ரயில் நிறுத்தம் பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரம்

தேனி ஐ.டி.ஐ., எதிரே ரயில் நிறுத்தம் பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரம்

தேனி: தேனி மதுரை ரோட்டில் அரசு ஐ.டி.ஐ., எதிரே ரயில் நிறுத்தம் அமைக்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.போடியில் இருந்து மதுரை வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 2022ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. தற்போது தினமும் மதுரைக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 'மீட்டர்கேஜ்' பாதையாக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த ரயில்வே பிளாட்பாரத்தில் ரயில்கள் நின்று சென்றன.இது மிக பயனுள்ளதாக இருந்தது. அகல ரயில்பாதை பணியில் பிளாட்பாரம் அகற்றப்பட்டது.இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் இங்கு மீண்டும் பிளாட்பாரம் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளது. இப் பணியை 2025 மார்ச்குள் நிறைவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகளை விரைவுப் படுத்தி உள்ளனர். இதனால் தேனி மதுரை ரோடு அரசு ஐ.டி.ஐ.,யின் எதிரே டிக்கெட் புங்கிங் வசதியுடன் ரயில் நிறுத்தம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Srinivasan
டிச 13, 2024 18:46

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இன்னும் தேனி டிராபிக் நெருக்கடிக்கு ஒரு தீர்வு வர வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை