கோரிக்கை அட்டை அணிந்து பணி
தேனி : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் துவக்கி உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.