உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

கடமலைக்குண்டு: கோவிந்தநகரம் வடக்குத்தெரு வேல்முருகன் 50, கூலித் தொழிலாளி. இரு நாட்களுக்கு முன் வேல்முருகன் தனது ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். மக்காச்சோளம் தோட்டத்தில் சொட்டுநீர் பாசன குழாய்களை இழுத்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி முத்துமணி புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி