ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
மூணாறு: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமோ 26. இவர், பழைய மூணாறு பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று மாலை மூலக்கடை பகுதியில் முதிரைபுழை ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது காப்பாற்றுமாறு பலமாக அலறியதால், அதனை பார்த்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே ஆற்றில் கரையோரம் உள்ள செடிகளை பற்றி உயிர் தப்பிய சுமோவை, மூணாறு தீயணைப்பு துறையினர் சுற்றுலா துறை படகு மூலம் பத்திரமாக மீட்டனர். சுமோ கால் தவறி ஆற்றில் விழுந்ததாக கூறப்பட்ட போதிலும் தன்னை யாரோ ஆற்றில் தள்ளி விட்டதாக அவர் கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. தற்போது மழை குறைவு என்பதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு இல்லாததால் சுமோ உயிர் தப்பினார் என்பது குறிப் பிடதக்கது.