உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

தேனி:தேனி மாவட்டத்தில் வீட்டில் துாங்கிய 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டிபட்டி தாலுகா கூலித்தொழிலாளி முனியாண்டிக்கு 26, இருபத்தைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான தம்பதியின் 6 வயது மகள் அப்பகுதி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். 2023 அக்., 12ல் ஆறு வயது மகளை வீட்டில் துாங்க வைத்து விட்டு இரவு பணிக்கு செல்லும் மனைவியை பஸ் ஏற்றி விட கணவர் சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்த தந்தையிடம் சிறுமி ' முனியாண்டி தன்னை பலாத்காரம் செய்ததாக அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். முனியாண்டியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். பின் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் உதவி வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார்.முனியாண்டிக்கு அத்துமீறி வீட்டில் நுழைந்ததற்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்கவும், அதில் இடைக்கால இழப்பீடாக ரூ.ஒரு லட்சம், கல்வி, மருத்துவ உதவிக்காக ரூ.50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீத தொகையை சிறுமி பெயரில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ