உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

மூணாறு:மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட் நியூ டிவிஷனில் இரவில் குடியிருப்பு பகுதியில் படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் தூக்கத்தை இழந்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை கடந்த ஒரு வாரமாக வாகுவாரை, காபிஸ்டோர், பாம்பன்மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குண்டுமலை எஸ்டேட் நியூ டிவிஷன் பகுதிக்கு வந்தது. அங்கு இரவில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா ஊமத்துரையின் வீட்டின் அருகில் உள்ள ஷெட், சொக்கத்தாய் என்பவது வீட்டின் மேல் கூரை, குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. தவிர வீடுகளின் அருகில் இருந்த வாழைகளை தின்றது. இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பாவை நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டிற்குள் விரட்டினர். இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சத்தில் தூக்கத்தை இழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை