உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாடக கலை பற்றிய பயிற்சி பட்டறை

நாடக கலை பற்றிய பயிற்சி பட்டறை

தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரியின் ஆங்கிலத்துறையின் சார்பில், நாடகக்கலைகள்' என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடந்தது. மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். இளங்கலை மாணவி கிருஷ்ணாஸ்ரீ வரவேற்றார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு துவக்க உரையாற்றினார். இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, ஆங்கிலத்துறை தலைவர் உமாகாந்தி வாழ்த்திப் பேசினர். மாணவி வேல்மணி பயிற்சி அறிமுக உரை ஆற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை நிவேதா, காட்சிகளுக்குப் பின்னால் மேடை நிகழ்வுகள்' என்ற தலைப்பில் நாடக கலைகள் அதன் சிறப்புகள், குறித்தும், எடுத்துக்கூறினார். முதுகலை மாணவி லிகிதா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ