உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அவரையில் மஞ்சள் வைரஸ் பாதிப்பு: விவசாயிகள் கவலை

அவரையில் மஞ்சள் வைரஸ் பாதிப்பு: விவசாயிகள் கவலை

தேனி: ''அவரையில் மஞ்சள் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'' என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சாகுபடியாகின்றன. இங்கு சாகுபடியாகும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, மயிலாடும்பாறை, சின்னமனுார் பகுதிகளில் அவரை அதிக அளவில் சாகுபடி ஆகிறது. தற்போது அவரையில் மஞ்சள் வைரஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. மகசூல் பாதிக்குமா என்ற அச்சம் விவசாயிகள் இடையே எழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து மஞ்சள் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த போதிய ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை