உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குரங்கணியில் டிரெக்கிங் டிச.,வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணியில் டிரெக்கிங் டிச.,வரை விண்ணப்பிக்கலாம்

தேனி,: ''தேனி மாவட்டம் குரங்கணியில் டிரெக்கிங் செல்ல டிசம்பர் வரை விண்ணப்பிக்கலாம்'' என மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்தார்.தமிழகத்தில் 31 வனப்பகுதிகளில் வனத்துறை மூலம் டிரெக்கிங்(மலையேற்ற பயணம்) அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி பகுதியில் 3 கி.மீ., துாரத்திற்கு கட்டணம் செலுத்தி வனத்துறை அலுவலர்களுடன் டிரெக்கிங் செல்லலாம். இந்த பயணம் குரங்கணியில் துவங்கி சாம்பலாறு எனும் பகுதி வரை சென்று திரும்புவதாகும். இந்த பயணத்தில் கொட்டக்குடி ஆறு, சிறிய நீர்வீழ்ச்சிகளை காணும் வகையில் உள்ளது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா கூறியதாவது: இந்த பயணத்திற்கு ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும். ஒரு பேட்ஜில் அதிகபட்சம் 10 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயணம் செல்பவர்களுடன் வனத்துறையினர் உடன் வருவர். இந்த பயணத்தில் சில அரிய பறவைகள், விலங்குகளை காணலாம்.இந்த டிரெக்கிங் பாதையில் ஜூன் முதல் டிசம்பர் வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க குறைந்த பட்சம் 12 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இது வரை 30 பேர் இந்த டிரெக்கிங்கில் பங்கேற்றுள்ளனர். விருப்பம் உள்ளோர் tamilnadu wild erness experience corporation என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ