உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்மோட்டார் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

மின்மோட்டார் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி: விவசாயிகளுக்கு வேளாண் பொறியில் துறை சார்பில் மின் மோட்டார் ஸ்டார்டர் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.இந்த கருவிகளை அலைபேசி செயலி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். மாவட்டத்திற்கு 180 விவசாயிகளுக்கு இந்த 'மோட்டார் ஸ்டார்டர்' கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மானியத்தில் இவை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த கருவிகளை பெற விரும்பும் விவசாயிகள் உத்தமபாளையம், தேனியில் உள்ள வேளாண் பொறியியல் துறை கோட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி