உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தேனி:'வேளாண்மை படித்த மாணவர்கள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்,' என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் 15 வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில் சேவை மையங்கள் அமைக்க 30 சதவீதமானியமாக வழங்கப்படும். மாவட்டத்திற்கு ரூ.66 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உழவு பணிக்கு தேவையான விதை, உரங்கள், இடுபொருட்கள் விற்பனை. பயிர்களில் பூச்சிநோய் மேலாண்மைக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும். வேளாண் இயந்திரம் வாடகை மையம், ட்ரோன் சேவை, வேளாண் இயந்திரம் பழுதுபார்க்கும் பட்டறை உள்ளிட்ட அனைத்து வேளாண் சேவைகளும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற முடியும். 20 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். https://tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களைசமர்பித்து விண்ணப்பிக்கலாம். வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு வேளாண்அலுவலர் தரக்கட்டுப்பாட்டு 94432 32238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.