உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

தேனி: இளைஞர்கள், இளம் பெண்கள் இடையே கடிதம் எழுதும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் தபால்துறை 2025க்கான கடிதம் எழுதும் போட்டிக்கு 'எனது முன்மாதிரிக்கு கடிதம்' எனும் தலைப்பில் நடக்க உள்ளது. பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள், அதற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளன. ஒரு முழு பக்க 'ஏ4' தாளில் 1000 வார்த்தைகள் அல்லது இன்லேண்ட்கடிதத்தில் 500 வார்த்தைகள் குறையாமல் எழுத வேண்டும். இவ்வாறு எழுதிய கடிதத்தை தலைமை தபால்துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை -என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். டிச.8 கடைசி நாளாகும். அதற்கு பின் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் அந்த கடிதங்கள் தேசியபோட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரம், 2ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2வது பரிசு ரூ.10 ஆயிரம், 3வது பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டியில்பங்கேற்பவர்கள் கடிதத்திலேயே 'நான் 2025 ஜன.1ல் 18 வயதிற்கு கீழே அல்லது அதற்கு மேலுள்ள வயதில் இருக்கிறேன்' என, சான்றளிக்கிறேன் எனக் குறிப்பிட வேண்டும் என தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு 99763 54800 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை