மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி:தென்காசியில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் எழுச்சி கூட்டம் நடந்தது.திருநெல்வேலி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அருள்திரு பங்காரு அடிகளார் மதுரை வருகையை முன்னிட்டு தென்காசி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் வைத்து மாபெரும் ஆன்மீக எழுச்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன் வரவேற்று பேசினார்.ஆலய புரவலர்கள் டாக்டர்.சுந்தரேசனார், டாக்டர்.முத்துகிருஷ்ணன், டாக்டர்.சோமசுந்தரம் ஆகியோரை ஆன்மீக சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட பொருளாளர் திருமலைக்குமாரசாமி, இளைஞரணி பாஸ்கர், சக்தி பீடத்தின் தலைவர் சங்கரநாராயணன் உட்பட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டமுடிவில் மன்ற தலைவர் பத்மநாபன் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025