உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கார் கண்ணாடி உடைப்பு: கைது 2

கார் கண்ணாடி உடைப்பு: கைது 2

திருநெல்வேலி : வீரவநல்லுார், சங்கரன்கோவிலில் கார் கண்ணாடிகள் உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பாதிரியார் ராஜ்குமார் 30. இவர் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர். அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முருகன் என்பவரது காரின் கண்ணாடியையும் உடைத்தனர். புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து 40, வீரபத்திரன் 30, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சங்கர் 46. தென்காசியில் வங்கி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் 64. ஹோமியோபதி டாக்டர். இவர்கள் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 11, 2024 03:23

சாலையில் காரை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று எங்காவது கேஸ் பதிந்துள்ளார்களா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை