உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பயணியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

பயணியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி, : வள்ளியூரில் பஸ் நிற்காது எனக் கூறி பயணிகளிடம் அவதூறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் மதுரை மூவேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பூரில் இருந்து திருநெல்வேலி வழியே நாகர்கோவில் செல்லும் மதுரை டிப்போ அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாகர்கோவில் கிளம்பியது. அந்த பஸ் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் கண்டக்டர், நாகர்கோவில் தவிர வேறு பயணிகள் ஏறாதீர்கள் எனக் கூறினார். வள்ளியூர் செல்லும் இரு பயணிகள் பஸ்சில் அமர்ந்திருந்தனர். அவர்களை கீழே இறங்குமாறு கூறிய கண்டக்டர் மூவேந்திரன் அவதுாறாகவும் பேசினார். இதனை சம்பந்தப்பட்ட ஒரு பயணி வீடியோ பதிவு செய்தார். இது குறித்து அரசு பஸ் நிர்வாகத்திடமும் புகார் கூறப்பட்டது.நேற்று மூவேந்திரனை அரசு பஸ் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ