உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / -காங்., எம்.பி., முன்னிலையில் கட்சியினர் கோஷ்டி மோதல்

-காங்., எம்.பி., முன்னிலையில் கட்சியினர் கோஷ்டி மோதல்

திருநெல்வேலி,: திருநெல்வேலியில் காங்., எம்.பி., ராபர்ட் புரூஸ் முன்னிலையில் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர்.திருநெல்வேலி தொகுதி லோக்சபா தேர்தலில் வேட்பாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் நிறுத்தப்பட்டார். அப்போது, கட்சியினர் கோஷ்டி பூசல், போராட்டங்களில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.பி., ராமசுப்பு உள்ளிட்டோர் போட்டி மனு தாக்கல் செய்ய வந்தனர். பிறகு ஒரு வழியாக ராபர்ட் புரூஸ் சீட் பெற்று போட்டியிட்டு எம்.பி., ஆனார்.நேற்று அவர் திருநெல்வேலியில் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். என்.ஜி.ஓ., காலனியில் உள்ள அவரது வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.'கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்கிறீர்கள். நாங்கள் நீண்ட காலமாக கட்சியில் உள்ளோம். தேர்தல் பணியாற்றியுள்ளோம். எங்களுக்கு ஏன் பொறுப்பு வழங்கவில்லை,' என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எம்.பி., தரப்பினருக்கும், அவரது அதிருப்தி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பையும் எம்.பி., அமைதிப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை