மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
கூடன்குளம்:கூடன்குளத்தில் நேற்று முன் தினம் நிறுத்தப்பட்ட 2வது அணு உலை உடனடியாக பழுது நீக்கப்பட்டு தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.கூடன்குளத்தில் இந்தியா - ரஷ்யகூட்டு ஒப்பந்தத்தில் இரு அணு உலைகள் நிறுவப்பட்டு அவற்றின் மூலமாக தலா. 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வந்தது.இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த மே 13 ம் தேதி நிறுத்தப்பட்ட 2வது அணு உலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துகடந்த 8ம் தேதி அதிகாலை 05:05 மணி முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. நேற்று முன்தினம் திடீரென வால்வுகள் பழுதானது. இதனால் உடனடியாக 2 வது அணுஉலை நிறுத்தப்பட்டு பழுது நீக்கும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவே பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.துவக்க நிலையில் 350 மெகாவாட் மின் உற்பத்தியில் இருந்து பின்னர் படிப்படியாக சில தினங்களில் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமென அணு உலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025