உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஒரு மாத பினாயில் செலவு ரூ.55 லட்சமாம் நெல்லை மாநகராட்சியில் தான் இந்த கூத்து

ஒரு மாத பினாயில் செலவு ரூ.55 லட்சமாம் நெல்லை மாநகராட்சியில் தான் இந்த கூத்து

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில், தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட நான்கு மண்டலங்கள் உள்ளன. மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜனவரி முதல் மார்ச் வரை விடுப்பில் சென்றிருந்தார். மார்ச் மாதம் மாநகராட்சிக்கு, 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியதாக பில் வந்துள்ளது. ஏப்ரலில் மீண்டும் பணி பொறுப்பேற்ற அலுவலர் சரோஜா, சந்தேகத்திற்குரிய பினாயில் உள்ளிட்ட பில்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்.குறிப்பாக, மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய்க்கு தான் பினாயில், சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவது வழக்கம். ஒரே மாதத்தில் 55.35 லட்சம் ரூபாய்க்கு பினாயில் மட்டும் வாங்கிய பில் குறித்து அவர் கமிஷனர் தாக்கரேவிடம் புகார் தெரிவித்தார். கமிஷனர் தணிக்கை செய்ய அனுப்பினார். தணிக்கை மேற்கொள்ள முடியாது என, அலுவலர்கள் மறுத்து விட்டனர்.மாநகராட்சி அலுவலர் கூறுகையில், 'திருநெல்வேலி மாநகராட்சியில் டிச., 17, 18ல் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கூட துாய்மை பணிக்காக இந்த அளவுக்கு பினாயில், பிளீச்சிங் பவுடர் வாங்கவில்லை. மார்ச், ஏப்ரல், ஜூன் வரையிலும் வெப்ப காலமாகும். பினாயிலுக்கு தேவையில்லை. கழிப்பறை துாய்மை பணிகளை பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே மேற்கொள்கின்றன.'ஒரு லிட்டர் பினாயில் 67 ரூபாய் வீதம் கூட்டுறவு பண்டக சாலையில் வாங்கியதாக பில் கொடுத்துள்ளனர். எனவே 20,000 லிட்டர் வாங்கியதாக கணக்கு கூறினாலும், 13 லட்சம் ரூபாய் தான் செலவாகி இருக்கும். 55 லட்சம் கணக்கு காண்பித்து நிதி இழப்பு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்' என்றார். இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டபோது, விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Suresh Rajagopal
மே 04, 2024 21:16

பெரிய வெளிநாட்டு கம்பெனியிலிருந்து இறக்குமதி செய்திருக்கலாம்


K.Muthuraj
மே 04, 2024 13:47

மக்கள் சந்தோசமாய் குளித்து, அந்த நீரிலேயே விவசாயமும் செய்து விளங்கிடும் நாடு


Bala
மே 04, 2024 13:41

அண்ணாமலை சொன்னது போல பினாயில் மூலமே பல கோடி ஊழல் நடந்துருக்கக்கூடும் என்று சொன்னது சரியாகத்தான் இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை