ரயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷனில் பணிபுரிபவர் அசோக்குமார் 38. இவரது வீடு தியாகராஜ நகர் அருகே ராஜகோபாலபுரம் சாய் பாலாஜி கார்டனில் உள்ளது. இவர் ஆக., 14ல் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், லேப்டாப் மற்றும் குத்து விளக்கு உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். திருநெல்வேலி - -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையொட்டி புதிதாக உருவாகும் விரிவாக்கப்பகுதிகளில் அடிக்கடி இத்தகைய திருட்டுகள் நடக்கின்றன. போலீசார் இதில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.