மேலும் செய்திகள்
மாணவர்கள் திடீர் மோதல்
15-Aug-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் டூவீலர் பார்க்கிங் தொடர்பாக மாணவர்கள் மோதிக் கொண்டதில் இருவர் காயமுற்றனர். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகம் அபிஷேகப்பட்டியில் உள்ளது. மாணவர்கள் டூவீலரில் பல்கலை வளாகத்தில் வேகமாக சுற்றித்திரிவதால் பல்கலை நுழைவாயில் அருகில் அனைத்து மாணவர்களுக்கும் டூவீலர் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆகாஷ் நேற்று டூவீலரை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகே வரை ஓட்டியுள்ளார். வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் செல்வம், நீ எப்படி டூவீலரை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முதலாம் ஆண்டு மாணவன் ஆகாஷுக்கு ஆதரவாக வந்த வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணனுக்கும் அருள் செல்வத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள்செல்வம் காயமுற்றனர். இருவரும் திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். ஜாதி மோதல் மோதலில் ஏற்பட்ட இரு தரப்பு மாணவர்களும் வெவ்வேறு ஜாதியினர். ஜாதி ரீதியாக மோதல் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
15-Aug-2025