உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பா.ஜ., நிர்வாகி கார் மோதி 2 பேர் பலி

பா.ஜ., நிர்வாகி கார் மோதி 2 பேர் பலி

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே டூவீலர் மீது பா.ஜ., மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக் கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆவரைக்குளத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் திருநெல்வேலி தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி தலைவராக உள்ளார். இவர் ஒரிரு நாட்களுக்கு முன் புதிதாக கார் வாங்கினார். நேற்று முன்தினம் இரவு அதனை டிரைவர் பாலகுமார் ஓட்டிச்சென்றார்.பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் சென்றபோது டூவீலர் மீது கார் மோதியது. இதில் டூவீலரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த நாகராஜன் 38, வினோத் 27, பலத்த காயமுற்றனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். பணகுடி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி