உள்ளூர் செய்திகள்

26 சவரன் நகை திருட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் விபின். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கோணம் ஐ.டி.ஐ.யில் பயிற்றுநராக உள்ளார். இவரது மனைவி பரமேஸ்வரி. வடக்கன்குளத்தில் உள்ள இவர்களது வீட்டில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. அப்போது பீரோவில் இருந்த, 26 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக பெயின்ட் அடிக்க வந்த தொழிலாளர்களிடம் பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ