உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு

10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி:தன்னை சப் கலெக்டர் எனக் கூறி, ரூ.1 கோடி கடன் பெறுவதற்காக 10 பவுன் நகையைப் பாதுகாப்பு பத்திரமாக பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே காரியாகுளத்தை சேர்ந்த குமரேசன் மனைவி மகிழ்வதனா 27. இவரது தூரத்து உறவினர் சத்யாதேவி. அவர் தன்னை சப் கலெக்டர் என்றும், ரூ.1 கோடி கடன் வரவிருப்பதாகவும், அதற்குப் பாதுகாப்பு பத்திரமாக 100 பவுன் நகை தேவைப்படுகிறது. தம்மிடம் 90 பவுன் நகை உள்ளது. 10 பவுன் நகை வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய மகிழ்வதனா 10 பவுன் நகையை கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் நகையைத் திருப்பித் தராததோடு, ரூ.1.45 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மகிழ்வதனா அளித்த புகாரின் பேரில் போலீசார் சத்யாதேவி, கணவர் சிவபெருமாள், சகோதரர் செல்வம், தாயார் நாகமணி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை