உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் மேக்கப்

தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் மேக்கப்

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் துவங்கி துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை, 75 கி.மீ., துாரம் பாயும் தாமிரபரணி ஆறு ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், இரு மாவட்ட விவசாயத்திற்கும் பயன்படுகிறது.மாநகராட்சி, நகராட்சிகளின் கழிவுநீர் பல்வேறு இடங்களில் தாமிரபரணியில் கலப்பதால் மாசுபடுகிறது. கடந்த, 2018ல் எழுத்தாளர் செய்துங்கநல்லுார் காமராஜ், நகராட்சிகளின் கழிவுகளை தாமிரபரணியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணியில் உள்ள பழமையான மண்டபங்கள், படித்துறைகளை சீரமைக்க கோரியும் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.ஆறாண்டுகளுக்கு பிறகு மார்ச் 11ல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி வழங்கிய தீர்ப்பில், 'தாமிரபரணியில் உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலக்கக்கூடாது. 'மண்டபங்கள், படித்துறைகளை ஹிந்து அறநிலையத்துறை சீரமைக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தனர். 16 துறையினருக்கு அந்த உத்தரவை அமல்படுத்தவும் அனுப்பினர்.ஆனால், திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாக்கடை கழிவுநீர் தாமிரபரணியில் கலக்கிறது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாதது குறித்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவ., 5ல் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆஜராக மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. கோர்ட்டில் ஆஜரான அவர், 'திருநெல்வேலி மாநகராட்சியில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 'இதில், முதல் கட்டம் நிறைவு பெற்று விட்டது. இரண்டாவது கட்டத்தில், 90 சதவீதம் முடிந்து விட்டது. 2025 செப்டம்பருக்குள் மூன்றாவது கட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்ற பிறகு தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலக்காது' என, உறுதி அளித்தார்.இருப்பினும், அவர் மாநகராட்சி கூட்டத்தில் தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தங்களால் எதுவும் செய்ய முடியாது என, தெரிவித்தார்.இதற்கிடையில், தற்போதைய நிலை குறித்து நவ., 10ல் நாளை தாமிரபரணியை ஆய்வு செய்ய வருகிறோம் என, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று மாநகராட்சியில் சாக்கடை அதிக அளவில் கலக்கும் இடங்களில் துாய்மை பணி யாளர்களை கொண்டு சுத்தப் படுத்தும் பணி நடந்தது. நீதிபதிகள் செல்லும் பாதையையும் பெருக்கி துாய்மைப்படுத்தினர். சாக்கடை துர்நாற்றம் தெரியாதவாறு ப்ளீச்சிங் பவுடர் துாவி பூந்தொட்டிகளை வைத்து தாமிரபரணிக்கு திடீர் மேக்கப் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

murugan
நவ 11, 2024 19:50

அரசு அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை இதிலிருந்து பார்த்துக்கொள்ளலாம். முதல் குற்றவாளி அரசுதான். லட்சக்கணக்கான மக்கள் தினமும் குடிப்பது இந்த நீரைத்தான். மானங்கெட்ட அரசும் அதிகாரிகளும்தான் குற்றவாளிகள்.


sankar
நவ 09, 2024 21:41

ஜெகஜால கில்லாடிகள்


Dharmavaan
நவ 09, 2024 15:32

புகார் கொடுத்தவர்கள் காட்டும் இடங்களை பார்வையிட வேண்டும்


Dharmavaan
நவ 09, 2024 08:32

திருடர்கள் எரியும் கண்துடைப்பு வேலை.இதில் நீதிபதிகள் மயங்கக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை