உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இறந்த தாயார் உடலை சைக்கிளில் கட்டி 18 கி.மீ., துாரம் எடுத்துச் சென்ற மகன் திருநெல்வேலியில் கண் கலங்க வைத்த சம்பவம்

இறந்த தாயார் உடலை சைக்கிளில் கட்டி 18 கி.மீ., துாரம் எடுத்துச் சென்ற மகன் திருநெல்வேலியில் கண் கலங்க வைத்த சம்பவம்

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டு இறந்த 65 வயது மூதாட்டி உடலை 18 கி.மீ., தூரத்திற்கு சைக்கிளில் கட்டி மகன் எடுத்துச் சென்றது காண்போரை கண் கலங்க வைத்தது. இத்தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பாதி வழியிலேயே உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் 65. இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார். 2வது மகன் செல்வம் இறந்து விட்டார். மூன்றாவது மகன் பாலன் 38, தாயை கவனித்து வந்தார்.சிவகாமிக்கு தீவிர மன சிதைவு இருந்தது. இதற்காக அடிக்கடி அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாலன் அழைத்து வந்து சிகிச்சை பெற செய்தார். இந்நிலையில் பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனம் நலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சிவகாமியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக பாலன் அனுமதித்திருந்தார். நேற்று காலை சிவகாமியம்மாள் உடல்நிலை மோசமானது. இதனால் வேறு ஒரு உறவினரை அழைத்து வரும்படி மருத்துவமனை ஊழியர்கள் பாலனிடம் கூறினர். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் அவர் தவித்தார்.இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட சிவகாமியம்மாளுக்கு அருகே உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பாலன் காபி வாங்கி கொடுத்தார். அப்போதே அவரால் காபியை உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் அங்கேயே இறந்தார். காலை 11:00 மணியளவில் இறந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாத பாலன் பகல் முழுவதும் கோயில் வளாகத்திலேயே இருந்துள்ளார்.மாலையில் தம் சைக்கிளின் பின் கேரியரில் தாயாரின் உடலை கயிற்றால் கட்டிக் கொண்டு உருட்டியபடியே ஊருக்கு கொண்டு சென்றார்.திருநெல்வேலி - -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பு பகுதியில் இரவு 10:00 மணியளவில் மூதாட்டி உடலுடன் சைக்கிளில் அவர் செல்வதை பார்த்தவர்கள் கண் கலங்கினர். சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக விரைந்து சென்ற போலீசார் மூன்றடைப்பில் அவரை மறித்து விசாரித்தனர். சிவகாமியம்மாள் இறந்ததை உறுதி செய்த போலீசார் வாகனம் மூலம் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் பாலன், அவரது அண்ணன் சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வறுமையால் நிகழ்ந்த பரிதாபம்

பாலனுக்கு மனநலம் பாதிப்பு இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வறுமையிலும் இருந்தார். வீட்டுக்கு உடலை கொண்டு செல்வதில் குறியாக இருந்தவர், திருநெல்வேலியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் 18 கி.மீ., தூரம் சைக்கிள் பின் கேரியரில் கட்டி வைத்து உருட்டியபடியே சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கண்டுகொள்ளாத மருத்துவமனை நிர்வாகம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் உதவிக்கு யாரும் இல்லாதவர்கள், வறியவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதில் தலைமறைவு (அப்ஸ் கான்டட் ) எனக்கூறி தாங்களாக வெளியே சென்றார்கள் என கணக்கு காட்டி அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்.நேற்றும் சிவகாமியம்மாள் அவ்வாறு தான் அனுப்பப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனை ஊழியர்கள் வீல்சேரில் வெளியே கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.மருத்துவமனை டீன் ரேவதி கூறுகையில், ''பாலன் தாயாரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக பிடிவாத்துடன் கேட்கும் போது எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அவரை அனுப்பி வைத்தோம். அவர் இறந்தது எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kesavan.C.P.
ஜன 26, 2025 14:07

வீட்டிற்கு கொண்டு செல்ல பிடிவாதம் செய்தால்போலீசுக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டும். கோவில், கோவில் அருகில் யாரும் இல்லையா? ஊரில் யாரும் இல்லையா? அவர்கள் உதவ முடியாவிட்டாலும் காவல் துறை கீது தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை. சட்டம் , விசாரணை முறைகள் விசாரணை, அலைகழிப்பு, அப்பீல், விசாரணை அலைகழிப்பு விதிகள். மனிதாபிமானத்தை கொடூர கொலை செய்கிறது .


Santhakumar Arumugam
ஜன 25, 2025 13:07

என்னடா இந்த உலகம், ஹாஸ்பிடல் இருக்கும் டாக்டர்க்கு தெரியல அந்த அம்மா இறந்தது. வெக்கம் இல்லாத மனிதர்கள்


Krishnamurthy Venkatesan
ஜன 25, 2025 12:13

மருத்துவம் நவீன மயமாக்கப்பட்டது என்பதில் பெருமை இல்லை. மனித நேயம் இங்கு கொல்லப்பட்டது. மக்களுக்கு உதவாத மருத்துவமனையும் மருத்துவர்களும் தேவை இல்லை. பணியில் இருந்த அனைவரையும் டிஸ்மிஸ் செய்திட வேண்டும்,


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 25, 2025 10:18

நினைத்தாலே கண் கலங்குகிறது. அழுகையை அடக்க முடியவில்லை. எப்படிப்பட்ட சமூகத்தில் வசிக்கிறோம் என்று நினைக்கும்போது கோபம்தான் வருகிறது. ஒரு புறம் கோடிகோடியா கொள்ளையடித்து தின்று கொழுத்து இருக்கும் கூட்டம். மறுபுறம், இப்படிப்பட்ட வேதனைகள். அரசும் அதிகார வர்க்கமும் தங்கள் மீது எந்த தப்பும் இல்லத்தமாதிரி பார்த்துக்கொள்வார்கள். பழியை ஆடுவார்கள் மீது போட்டு தப்பித்து கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இறந்த உடலை வீட்டுக்கு எடுத்து செல்வதற்கு கூட யாரும் உதவவில்லை என்பதை நினைத்தால் மனது வலிக்கிறது. மனிதாபிமானம் சுத்தமாக போய்விட்டது.


N S Sankaran
ஜன 25, 2025 08:56

இறைவா இந்த கலியுகத்தை சீக்கிரம் முடித்து வை.


Mani . V
ஜன 25, 2025 06:04

என்ன எழவு மாடலோ? பெத்...ம்மா ஆசைப்பட்டா கார் பந்தயம் நடத்துவோம். ஆனால் ஒரு ஆம்புலன்சுக்கு வழியில்லை.


Mani . V
ஜன 25, 2025 06:02

என்ன எழவு மாடலோ? பெத்தம்மா ஆசைப்பட்டா கார் பந்தயம் நடத்துவோம் ஆனால் ஒரு ஆம்புலன்சுக்கு வழியில்லை. தூ


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 26, 2025 09:35

சைக்கிளில் கொண்டு சென்ற மகனுக்கு மனநோய். உனக்குமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை