உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்த போது நவ.,16 அதிகாலையில் தியேட்டர் மீது அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் ரஸின், ஆசுரான் மேலத் தெருவைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி ஆகியோரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.நேற்று காலை மேலப்பாளையத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கைதானவர்களின் வீடுகளில் திடீர் சோதனை மேற் கொண்டனர்.இவ்வழக்கு தொடர்பாக இம்தியாஸ், சிராஜுதீன், கோலா பாதுஷா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. பிறகு சிராஜுதீன், கோலா பாதுஷா ஆகியோரை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கைதானவர்களுக்கு சிம் கார்டு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிசாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடுகளில் சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், அலைபேசி, சிம் கார்டுகளை கொண்டும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
டிச 30, 2024 16:39

சம்பவம் நடந்து பல மாதங்களுக்கு பின் சோதனை நடத்தி என்ன பயன்


kumarkv
டிச 29, 2024 17:13

முடிந்தால் சுட்டுதள்ளுங்க இந்த நாய்களை


நிக்கோல்தாம்சன்
டிச 29, 2024 16:41

எப்போது தான் திருந்துவார்கள் இந்த துரோகிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை