உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆட்டிசம் குறைபாடு சிறுமி இறப்பு

ஆட்டிசம் குறைபாடு சிறுமி இறப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆட்டிசம் குறைபாடு சிறுமி உடல் நலம் பாதித்து இறந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.திருநெல்வேலி வடக்கு ஐகிரவுண்ட் சாலையில் ஆட்டிசம் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றிய சிறார்களுக்கான சிறப்பு தனியார் மையம் உள்ளது. துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ராஜா புதுக்குடியை சேர்ந்த மாடசாமி- ஜெயா தம்பதியின் மகள் அபிதா 6, ஆட்டிசம் குறைபாட்டால் இங்கு கடந்த 3 மாதங்களாக தங்கி பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவில் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.பெற்றோர் வந்து பார்த்தபோது சிறுமி இறந்துவிட்டார். முகத்தில் காயங்கள் உள்ளன. எனவே அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமி உடலை வாங்க மறுத்து விட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை