வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒருவேளை புயலால் வந்த பாதிப்பா இருக்குமோ?
திருட்டு... திராவிடம்.. மாடல்...ஆட்சி... சட்டம் ... ஒழுங்கு..
மேலும் செய்திகள்
விபத்தில் ஒருவர் பலி
08-Nov-2024
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே ஆட்டோ டிரைவர் உலகநாதன் 42, கள்ளக்காதல் தகராறில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் உலகநாதன் முக்கூடலில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் மாலை வீரவநல்லூரில் இருந்து முக்கூடலுக்கு டூவீலரில் சென்ற உலகநாதனை அரிகேசவநல்லூர் அருகே வழிமறித்த 3 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். வீரவநல்லூர் போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது: உலகநாதன் இரு லோடு ஆட்டோக்களை வைத்திருந்தார். கபாலிபாறையைச் சேர்ந்த பாலமுருகன் அவரிடம் டிரைவராக வேலை செய்தார். உலகநாதனுக்கு பாலமுருகன் மனைவி தங்கத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் தங்கம் கணவரை பிரிந்து வீரவநல்லூரில் தனியாக வசித்து வந்தார். உலகநாதன் அவரை சந்தித்து வந்தார். மனைவியை பிரித்த உலகநாதனை பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் கபாலிபாறை முருகேசன் 27, வீரவநல்லூர் வாஞ்சிநாதன் 24, ஆகியோர் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றனர்.
ஒருவேளை புயலால் வந்த பாதிப்பா இருக்குமோ?
திருட்டு... திராவிடம்.. மாடல்...ஆட்சி... சட்டம் ... ஒழுங்கு..
08-Nov-2024