பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் செயல்படும் அணுசக்தி துறையின் மத்திய பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இ மெயில் மிரட்டல் வந்தது.தென்காசி அருகே ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்க பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் இ மெயில் வந்தது. புகாரின் பேரில் போலீசார் பள்ளிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் வெறும் மிரட்டல் என தெரியவந்தது. சமீபகாலமாக போலி இமெயில் முகவரியிலிருந்து இருந்து மாவட்டம் தோறும் ஒரு பள்ளிக்கு இத்தகைய மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.