மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தை சேர்ந்த வைகுண்டம் மகன் பண்டாரம் 21. நேற்று முன்தினம் டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கி மூளைசாவடைந்தார். டாக்டர்கள் மூளையில் செயலிழப்பு ஏற்பட்டதாக அறிவித்த நிலையில், பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து அவரின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.