வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதோடு இனி அந்தோணிக்கு எந்த அரசு பயனும் கிடைக்காதவாறு சட்டம் இயற்றப்படவேண்டும் , அதாவது அரசு சலுகைகளில் இருந்து blacklist செய்யப்படவேண்டும் அப்போதுதான் தவறு செய்ய பயப்படுவார்கள்
திருநெல்வேலி: கோவில் பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருநெல்வேலியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில், வள்ளியூரை சேர்ந்த கோவில் பூஜாரி சுப்பிரமணியன், குடும்பத்துடன் பயணித்தார். அப்போது, பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் அந்தோணி அடிமை, 'பஸ்சில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பயணியர் அதிகம் இருப்பதால், உன் ஒருத்தனுக்காக மட்டும் பஸ் வள்ளியூர் ஊருக்குள் செல்லாது. பைபாசில் இறங்கிக்கொள்' என, கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன், பஸ்சில் இருந்து இறங்க மறுத்ததால், அவரை பற்றி மத ரீதியாக அவதுாறாக பேசினார். இது குறித்த செய்தி, நேற்று 'நம் நாளிதழில்' வெளியிடப்பட்டது. சம்பவம் குறித்து நாகர்கோவில் பணிமனை அதிகாரிகள் நேற்று விசாரித்தனர். அனைத்து பஸ்களையும் வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் செல்ல அறிவுறுத்தினர். கண்டக்டர் அந்தோணி அடிமையை சஸ்பெண்ட் செய்து, நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதோடு இனி அந்தோணிக்கு எந்த அரசு பயனும் கிடைக்காதவாறு சட்டம் இயற்றப்படவேண்டும் , அதாவது அரசு சலுகைகளில் இருந்து blacklist செய்யப்படவேண்டும் அப்போதுதான் தவறு செய்ய பயப்படுவார்கள்