மேலும் செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 1563 வழக்குகளுக்கு தீர்வு
14-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத விரக்தியில் 70 வயது முதியவர் நீதிபதி முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டார். திருநெல்வேலி கீழப்பாட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா 70. திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையில் 4 மாதங்களாக விசாரணை கைதியாக உள்ளார். ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமின் இதுவரை கிடைக்கவில்லை. வழக்கு குறித்த நகல்கள் கிடைப்பதிலும் தாமதமானதால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று காலை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியை பார்த்து வேட்டியை கழட்டி அநாகரீகமாக நடந்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
14-Sep-2025