உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ.90 லட்சம் சொத்து குவிப்பு; இன்ஜினியர் மீது வழக்கு

ரூ.90 லட்சம் சொத்து குவிப்பு; இன்ஜினியர் மீது வழக்கு

திருநெல்வேலி; திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது வீட்டில் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்தன. பணிகள் முழுமைக்கும் உதவி பொறியாளர் பிலிப் ஆண்டனி, 54, கமிஷனர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பணிகள் நடந்த காலத்தில் அவர் வண்ணார்பேட்டையில் பிரபல நகைக்கடையில் அடுத்தடுத்து நகைகள் வாங்கியது, விலை உயர்ந்த சொகுசு கார்கள் வாங்கியது, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியது என, சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. புகார்களை தொடர்ந்து, மே 21ம் தேதி பிலிப் ஆண்டனி, நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து திருநெல்வேலியில் பணியாற்றி வந்தார். பின், ஒரே மாதத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு பணி மாறுதல் பெற்றார். அடுத்து கோவில்பட்டிக்கு மாறுதல் பெற்றார். அவர் மீதான ஊழல் புகாரின் படி, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசார், பிலிப் ஆண்டனி, அவரது மனைவி நசீமா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர், வருமானத்துக்கு அதிகமாக, 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஐசக் நகரில் உள்ள பிலிப் ஆண்டனி வீட்டில் 7 மணி நேரம் சோதனை நடந்தது . பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Premanathan S
ஆக 30, 2025 20:40

இவர் லஞ்சம் மிக குறைவாக வாங்கி இன்ஜினியர்களின் மதிப்பை குறைத்து விட்டார். எனவே இவர் அதற்காக அவசியம் தண்டிக்கப்படுவார்


V RAMASWAMY
ஆக 30, 2025 18:37

இம்மாதிரி லஞ்ச முதலைகளுக்கு உடன் தண்டனை கொடுக்கவேண்டும் சொத்துக்கள் பறிமுதல்,வேலை நீக்கம், சிறை தண்டனை, அபாரத தொகையுடன்.