முதல்வர் அண்ணாச்சி... வாக்குறுதிகள் என்னனாச்சு நயினார் நாகேந்திரன் பேச்சு
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த பா.ஜ., பூத் கமிட்டி கூட்டத்தில் மாநில பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: லாக்கப் இறப்புகளுக்கு முதல்வர் ஸாரி சொல்கிறார். தி.மு.க., ஆட்சி குடும்ப ஆட்சி. பா.ஜ., ஆட்சி மக்களுக்கான ஆட்சி. தி.மு.க.,ஆட்சி ஒரு டிசாஸ்டர் மாடல் ஆட்சியாகும். 1999ல் பா.ஜ.,வுடன் திமுக கூட்டணி வைத்தபோது சந்தர்ப்பவாத கூட்டணியாக உங்களுக்கு தெரியவில்லையா முதல்வர் அவர்களே. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர். நீதிக்கும் அநீதிக்குமான போர். இந்த போரில் தர்மம் வென்றாக வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். இனி வரும் 8 மாதங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தி.மு.க., கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட உள்ளார். முதல்வர் அண்ணாச்சி... நீங்கள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் என்ன ஆச்சு. நீங்கள் தந்த வாக்குறுதி பட்டியலின்படி தி.மு.க., வாக்குறுதிகள் எண்கள் 503, 504, 114, 159, 285, 356, 163, 321, 187, 50, 183 இவ்வாறு 400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை சொல்லலாம். எந்த வாக்குறுதிகளையும் நீங்கள் நிறைவேற்றவில்லை. வாக்குறுதி கொடுப்பது அவர்களது பழக்கம். தேர்தல் முடிந்ததும் அதை மறப்பது அவர்களுடைய வழக்கம். இவ்வாறு பேசிய நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மறக்காதே பூத்தினை மறக்காதே என்ற பாடலையும் பாடினார்.