உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டூ-வீலர் மீது மோதிய கார் தம்பதி பலி; மகன் காயம்

டூ-வீலர் மீது மோதிய கார் தம்பதி பலி; மகன் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே டூ-வீலர் மீது கார் மோதியதில் தம்பதி பலியாயினர். மகன் பலத்த காயமடைந்தார்.துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம் பண்ணையை சேர்ந்தவர் பாதாளமுத்து, 45, மனைவி கோதை நாச்சியார், 43. இவர்களது மகன் சுரேஷ், 16. மூவரும், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு டூ-வீலரில் திரும்பி கொண்டிருந்தனர். திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையில், கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார், டூ-வீலரில் மோதியது. இதில் பாதாளமுத்து, கோதை நாச்சியார் பலியாயினர். பலத்த காயமடைந்த, சுரேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து, திருநெல்வேலி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ