உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்

நெல்லை மாநகராட்சி முறைகேடுகள் பற்றி புகார் கூறியவருக்கு வெட்டு: சமூக விரோதி அட்டூழியம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி முறைகேடு பற்றி புகார் கூறிய சமூக ஆர்வலரை, மர்ம நபர் இன்று (மே 04) காலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருநெல்வேலி பாளை, மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன் 35. கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். சமூக ஆர்வலராகவும் உள்ளார். திருநெல்வேலியில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ur43wtd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்தும், பல்வேறு முறைகேடுகள் குறித்தும் தகவல் பெறும் உரிமை மூலம் தகவல் பெற்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.நெல்லை மாநகராட்சியில் ரோடு காண்ட்ராக்ட் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்டதை கண்டித்து புகார் தெரிவித்து இருந்தார். அது தொடர்பான வழக்கில் இன்று காலை அவர் திருநெல்வேலி ஜங்ஷன் போலீசில் சாட்சி விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தார். இன்று( மே 04) மேலும் ஒரு மின்வாரிய வழக்கிலும் அவர் சாட்சி கூற இருந்தார். இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாட சென்ற போது அரங்கில் நுழைந்த ஒரு நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தலை, முதுகு, கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பல்லவி
மே 11, 2024 16:18

கொடை நாடு மூடி மறைக்கப்பட்டடது


Barakat Ali
மே 04, 2024 14:48

திமுக ஆட்சிக்கு வந்தாலே இவையனைத்தும் சகஜம்


G Mahalingam
மே 04, 2024 13:58

சில போலீசாரே இப்போது உடந்தையாக இருக்கிறார்கள் போதை ஆசாமி மீது புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் தலைமறைவாக இருக்க வேண்டி உள்ளது போலீசார் இவர் தான் புகார் கொடுத்தார் என்று அவனிடம் சொல்லி விடுகிறார்கள்


lana
மே 04, 2024 13:54

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி


UTHAMAN
மே 04, 2024 12:38

திராவிஷ மாடல் தலீவருக்கும் கூட்டணி அடிவருடிகளுக்கும் எதுவுமே உரைக்காதே


Ramesh Sargam
மே 04, 2024 12:22

முறைகேடுகளை தட்டிக்கேட்பது ஒரு தவறா? திமுக ஆட்சியில் எல்லாமே முறைகேடுதான் அவர்கள் கூண்டாக்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியே நடத்துகிறார்கள் திமுக ஒழியவேண்டும்


Natchimuthu Chithiraisamy
மே 04, 2024 11:55

முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்கள் கொலை செய்து விடுவார்கள் என்கிற பயம்


Vivekanandan Mahalingam
மே 04, 2024 11:53

சென்னை கார்பொரேஷன் போட்ட ட்வீட் க்கு நான் ரிப்ளை பண்ணியிருக்கேன் - உடனே என்னோட பெயர் முகவரி கேட்டு ட்வீட் வந்தது - தெரியல வெட்டறதுக்கு ஆள் அனுப்புவாங்களோ


shiva
மே 04, 2024 13:59

சொல்ல mudiyadhu


Lion Drsekar
மே 04, 2024 11:50

அடுத்து நமக்கு இருக்கு , நான் தயாராக இருக்கிறேன், என்றைக்கு இருந்தாலும் உயிர் போகத்தான் போகிறது நாட்டுக்காக உழைக்கும் போது போகவில்லை, மீண்டும் மக்களுக்காக , ஜனநாயகத்தின் மாண்பை உணர்வதற்காக, தீய அகதிகளின் அசுரர் வளர்ச்சியை அறிவதற்காக கருத்துக்களை கூறுகிறோம் , இதுவும் கண்காணிப்புக்கு உள்ளாகி , இதே நிலைக்கு ஆட்க்கொள்ளப்படும், வாழ்க முடியாட்சி, வந்தே மாதரம்


kannan
மே 04, 2024 11:41

ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? திமுக அரசின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை