மேலும் செய்திகள்
டூவீலர் மீது பஸ் மோதல்: ஒருவர் கால் துண்டிப்பு
23-Jul-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கணான்குளம் அருகே வேலியார்குளத்தை சேர்ந்தவர் ஆனந்த் பாபு 19. சேரன்மாதேவி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்துவந்தார். களக்காட்டை சேர்ந்தவர் கமலேஷ் 19. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவில் டூவீலரில் சென்றனர். வேலியார்குளம் அருகே எதிரே வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியதில் ஆனந்தபாபு சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த கமலேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேரன்மாதேவி போலீசார் விசாரித்தனர்.
23-Jul-2025