உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

முன்னாள் எஸ்.ஐ., கொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; அலட்சிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை விவகாரத்தில், தேடப்பட்டு வந்த குற்றவாளி, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனையடுத்து அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oogyk19f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் நேற்று அதிகாலை, திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகேயுள்ள மசூதியில் தொழுகை முடித்து, ஜாஹிர் உசேன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நான்கு பேர் கும்பல் ரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது.சில தினங்களுக்கு முன், ஜாஹிர் உசேன் முதல்வரின் பார்வைக்கு என, ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து சட்டசபையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. 'ஜாஹிர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை' என சட்டசபையில் பேசிய இ.பி.எஸ்., குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, 'இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்னிறுத்தப் படுவார்கள்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.இந்நிலையில், ஜாஹிர் உசேன் கொலை சம்பவத்தில் ஏற்கனவே அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பட்டுள்ளது என மாநகர போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு

இச்சம்பவம் தொடர்பாக முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வந்தனர். அவர், பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது தலைமைக் காவலர் ஆனந்த் என்பவரை குற்றவாளி போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Padmasridharan
மார் 20, 2025 03:30

suspension or transfer will not work. just DISMISS them if found corrupted


shakti
மார் 19, 2025 22:07

அமைதி மார்க்கமா போன கிருஷ்ணமூர்த்தி கொலைகாரன் ஆனதுதான் மிச்சம் ...


மனிதன்
மார் 20, 2025 02:56

இது சரியாகாத பைத்தியம்...


தமிழ்வேள்
மார் 19, 2025 22:07

கொலையான ஜாகீர் பாய், கொலை செய்த தவுபீக் பாய்-ன் சொத்தை வக்பு சொத்து என்று அறிவித்து ஆட்டையை போட முயன்றதால் நடந்த கொலை... வக்பு வாரியம் முற்றிலும் கலைக்கப்பட்டால் தான் இந்த மாதிரியான பஞ்சாயத்து அழியும். இந்த வக்பு சொத்து தொடர்பை திமுக போலீஸ் மறைக்கிறது.


Jebamani Mohanraj
மார் 19, 2025 20:20

காவல்துறை அதிகாரிகளுக்கு வேலை கடுமையாக இருக்கிறது பல பிரச்னைகள் நீதிமன்றங்கள் கேலி மன்றங்களானதும் ஒரு காரணம்


பேசும் தமிழன்
மார் 19, 2025 18:49

கிருஷ்ணமூர்த்தி..... முகமது தவுபிக்.......இங்கேயும் மத மாற்றம் நடந்து இருக்கிறது.


Appa V
மார் 19, 2025 18:38

கொலை செய்தவர்...கொலை செய்யப்பட்டவர்...இவர்கள் மதம் இனம் மற்றும் சார்ந்த அரசியல் கட்சிகள் அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை இருக்கும் என்று சொல்லப்படுகிறது ...


GMM
மார் 19, 2025 18:26

உள்ளூர் போலீஸ் பார்வை புரிந்து, தமிழக முதல்வர் பார்வைக்கு ஒரு செய்தி தந்துள்ளார். இருந்தும் கொலை. தென் மாவட்ட கூலி படைகள் வலுவானது. நீதிமன்றம் கூட அச்சத்துடன் விசாரிக்கும்.? சாதி, மத, அரசியல் கலந்து விடும். உளவு பிரிவுக்கு எதிர் கட்சியை வேவு பார்க்க நேரம் காணாது. கவுரவம் பார்க்காமல் ,மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு ஒப்படைத்தால் முடியும். ஆளும், எதிர்க்கட்சி அரசியல் புரிய நடிக்கின்றனர். மாநில போலீசில் விஜயகுமார் போன்ற உறுதியான அதிகாரி இல்லை. சஸ்பெண்ட் ஒரு சஸ்பென்ஸ்.


अप्पावी
மார் 19, 2025 18:21

காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் மாதிரி தௌபீக் என்கிற கிருஷ்ணமூர்த்தி. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.


अप्पावी
மார் 19, 2025 18:19

அதிகாரிகள் அலட்சியம் என்பது தப்பு. தத்திகள்.வேலையே தெரியாது. எவனாவது மந்திரிக்கு காசு குடுத்துட்டு வேலைக்கு வந்திருப்பாய்ங்க.


MUTHU
மார் 19, 2025 18:10

இவரு மேல தௌபீக்குக்கு என்ன காண்டு இருக்கப்போகுது. சப் இன்ஸ்பெக்டரா இருந்தப்ப தௌபீக்குக்கிட்ட என்ன குசும்பு செய்தாரோ.


சமீபத்திய செய்தி