உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாதிரியாரை அடித்து உதைத்த ஓரினச்சேர்க்கை கும்பல் கைது

பாதிரியாரை அடித்து உதைத்த ஓரினச்சேர்க்கை கும்பல் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்குள் பாதிரியார் அருள்சீலனை 50, அடித்து உதைத்த ஓரினச்சேர்க்கை கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கொட்டாரம் கத்தோலிக்க பாதிரியாராக இருப்பவர் அருள்சீலன் 50. இவர் ஜூலை 9 மாலை காரில் திருநெல்வேலி சென்றார். இரவு 7:30 மணியளவில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்குள் சென்றார். அங்கிருந்த 6 வாலிபர்கள் அவரை மிரட்டி ரூ.ஒரு லட்சம், அலைபேசி, ஏ.டி.எம். கார்டுகளை பறித்தனர். பின் அவரது காரிலேயே கங்கைகொண்டானுக்கு அழைத்து சென்றனர். வழியில் அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.ஆயிரக்கணக்கில் பணம் எடுத்து ஷாப்பிங் செய்தனர். நள்ளிரவில் ஆலடிப்பட்டி அருகே ரோந்து வந்த போலீசாரை கண்டதும் அந்த கும்பல் பாதிரியாரை விட்டு விட்டு தப்பியது. பாதிரியார் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் ஆப்பை பயன்படுத்தி பாதிரியாரை வரவழைத்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜவல்லிபுரம் ஆறுமுக கனி, நடராஜனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 08:00

தமிழக சட்டம் ஒழுங்கு , எப்பா படிக்கவே தலையை சுத்துது , ஆனா தலைமை என்ன சொல்லுதோ அதனை எழுதும் பகுத்தறிய தெரியாத பாமரர்கள் நிறைந்த நாடு தமிழ்நாடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை