உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஓட்டலுக்கு தீ வைப்பு

ஓட்டலுக்கு தீ வைப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 80. இவரது இடத்தில் பத்தமடையைச் சேர்ந்த பாலமுருகன் சில வாரங்களுக்கு முன் கூரை செட் அமைத்து ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு ஊருக்குச் சென்றார். அப்போது அதிகாலை ஆட்டோவில் வந்த இருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பிச்சென்றனர். இதில் ஓட்டல் முழுதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சுந்தர்ராஜன் புகாரின் பேரில் திருநெல்வேலி தாலுகா போலீசார் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி