உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு

பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த பா.ஜ.,பூத் கமிட்டி கூட்டத்தில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: போர் என்று வரும்போது படைத் தளபதிகள் தான் முன்னால் இருப்பார்கள். பா.ஜ.,வை பொறுத்தவரை பூத் பொறுப்பாளர்கள் தான் முன்னணியில் இருப்பவர்கள். அடுத்த 8 மாத காலம் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பழனிச்சாமியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டிய பொறுப்பு நம் கூட்டணிக்கு உள்ளது. இந்த அரசுக்கு எதிராக போராடி பலரும் சிறைக்கு சென்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம். ஆர்ட்டிகள் 370 ஐ பார்த்தால் பயம், புதிய கல்விக் கொள்கையால் பயம், 130 ஆவது சட்ட திருத்தம் ஏற்றுக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல்வருக்கு பயம். எதற்கெடுத்தாலும் பயப்படும் முதல்வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 2026ல் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் நடக்கும் கடைசி பூத் கமிட்டி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rukmani
ஆக 25, 2025 01:27

அரசியல் அரங்கில் நிரந்தர நட்பும் கிடையாது பகையும் கிடையாது. அதில் எல்லாம் சமய சந்தர்ப்ப வாய்ப்பு கணிப்பு தான்.


Sridhar
ஆக 23, 2025 14:50

கடைசில இந்த நிலைமைக்கு வந்துட்டாரே ஆட்சியை பிடிக்க பிஜேபி என்னவேணுமானாலும் செய்யுமா? அப்போ திமுகவோடு நேர கூட்டணி வச்சுறவேண்டியதுதானே? அதுதான் ஏற்கனவே வாஜ்பாய் வழிகாட்டி கொடுத்திருக்கிறாரே?


முக்கிய வீடியோ