/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருமண தகவல் நிலைய உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : வாலிபர் கைது
திருமண தகவல் நிலைய உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : வாலிபர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் திருமண தகவல் நிலைய உரிமையாளரை தகராறில் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 41. இங்கு ஜங்ஷனில் திருமண தகவல் நிலையம் நடத்தி வருகிறார். இதில் இளம்பெண் ஒருவர் வேலை பார்க்கிறார். அவருக்கு சம்பள பாக்கி இருந்தது. அந்த பெண்ணின் உறவினர் மருதுார் ரத்தின வேல் 25 , நேற்று காலை விஜயகுமாரிடம் பணத்தை கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ரத்தினவேல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயகுமாரின் தலை, உடல் என சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகுமார் மனைவி, குழந்தைகள் கண்முன்னரே இந்த சம்பவம் நடந்தது. ரத்தினவேலுவை போலீசார் கைது செய்தனர்.