மேலும் செய்திகள்
தேனீக்கள் கொட்டியதில் 7 பேர் பாதிப்பு
13-Aug-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ளது இடைகால் கிராமம். நேற்று முன்தினம் இரவு அங்கு ஒரு சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் கூடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியே மகாராஜன் டூவீலரில் வேகமாக சென்றார். இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்தனர். மகாராஜன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் கிளம்பி சென்றவர் பெட்ரோல் பங்கில் இருந்து கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். ஊர் பஞ்சாயத்து கூடி இருந்த பகுதியில் இருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ராமகிருஷ்ணன் மீது தீப்பற்றி காயமுற்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மகாராஜனை தாக்கினார் அவரை அரிவாளால் வெட்டினர் இதில் அவர் பலத்த காயமடைந்தார். இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ராமகிருஷ்ணன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ராமகிருஷ்ணன் புகாரின் பேரில் மகாராஜன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மகாராஜன் புகாரின் பேரில் எதிர்தரப்பைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
13-Aug-2025