உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / துப்பாக்கியுடன் போலீஸ் திருநெல்வேலியில் ரோந்து

துப்பாக்கியுடன் போலீஸ் திருநெல்வேலியில் ரோந்து

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில், இங்கு மாவட்ட கோர்ட் முன்பாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.தொடர்ந்து, குற்றத்தடுப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் உட்பட இரு போலீசார் மாநகர பகுதிகளில் டூ - வீலரில் ரோந்து செல்லும் பணியை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேற்று துவக்கினார். மொத்தம், ஐந்து குழுவினர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். நிகழ்வில் போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம், கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

karthik
ஜன 12, 2025 12:30

சாமி இது கடமை ஆச்சே இதுக்கு எதுக்கு ஒரு நிகழ்ச்சி? இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கு தேவையான ஒன்று அதனால் வரவேற்போம் - காவல்துறையை பார்த்தால் திருட்டு கபோதிகளுக்கு பயம் வர வேண்டும், பொறுக்கித்தனம் செய்பவர்களை தைரியமாக சுட்டு தள்ளுங்கள் , அவர்கள் இருந்து வீட்டுக்கும் , நாட்டுக்கும் பிரயோஜனம் இல்லை


அப்பாவி
ஜன 12, 2025 08:29

அவனவன் கைத்துப்பாக்கு, ரிவால்வரோடு சுத்தறான். இவிங்க குருவி சுடற மாதிரி துப்பாக்கியோட ரோந்து. எப்போ எறக்கி, எப்போ பூட்டி?


சமீபத்திய செய்தி